சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி கே.நளினிதேவி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
   திருத்தணி-பள்ளிப்பட்டு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் கடந்த சனிக்கியழமை சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனை, சட்ட பிரச்னைகளில் சமூகத் தீர்வு உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அரசின் திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற ஏதுவாக பொதுமக்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
   இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளிப்பட்டு மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் நீதிபதி கே. நளினிதேவி கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
   இப்பேரணி சோளிங்கர் சாலை, பஜார் சாலை, காந்தி சாலை, பேருந்து நிலையம் உள்பட பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai