Enable Javscript for better performance
பாஜக பிரமுகர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பா.ஜ.க. பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து மாதவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     சென்னை மாதவரம் மாரியம்மன்கோயில் தெருவை ச் சேர்ந்தவர் பாலாஜி(43)(படம்). இவர் பா.ஜ.க.வில் திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா அணிச் செயலாளராக இருந்து வந்தார்.
     இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த கபாலி, அசோக் ஆகியோருக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
     அப்போது அவர்கள் பாலாஜியை உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
     இது சம்பந்தமாக மாதவரம் போலீஸார் கபாலியை கைது செய்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜி கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார்.
     மேலும் அவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பாலாஜி திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     இது குறித்து மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai