சுடச்சுட

  

  புட்லூர் ஏரியில் கழிவு நீர்: பாதிக்கப்படும் கிராம மக்கள்

  By  திருவள்ளூர்,  |   Published on : 14th November 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  n6

  திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வார்டு பகுதிகளில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் புட்லூர் ஏரியில் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   பாதாள சாக்கடைத் திட்டம் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் காக்களூர் தேவி மீனாட்சி நகரில் அமைத்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் புட்லூர் ஏரியில் விடுகின்றனர். பின்னர் இந்த ஏரியிலிருந்து கால்வாய் மூலம் கூவம் ஆற்றில் கலக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
   ஆனால் தற்போது, மழை நீரும், சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவு நீரும் கலப்பதால் புட்லூர் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது.
   இந்த ஏரியிலிருந்து கூவம் ஆற்றுக்கு மதகுகள் வழியாக நீரை அனுப்பாமல் குடியிருப்புப் பகுதியில் அமைத்துள்ள சிறிய மதகுகள் வழியாக திருப்பி விடுகின்றனர். இதனால் புட்லூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பிருந்தாவன் நகர், உல்லாசம் நகர், காக்களூர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிக்குள் அசுத்த நீர் புகுந்து விடுகிறது.
   இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
   மேலும், இதனால் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
   இந்த நிலையில் ஏரியிலிருந்து கூவம் ஆற்றுக்குத்தான் நீர் செல்லவேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai