சுடச்சுட

    

    பெரியபாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    By  கும்மிடிப்பூண்டி,  |   Published on : 14th November 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியபாளையத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
     பெரியபாளையம் காவல் நிலையத்தில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்ட சட்ட ப் பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இந்த முகாமிற்கு பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் வெங்கடேசன், வழக்கறிஞர்கள் பாஸ்கரன், வாசுதேவன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற இளநிலை உதவியாளர் முகமது அலி கலந்துகொண்டு சட்டங்கள் குறித்தும், பொதுமக்களின் பிரச்னைகளை சட்ட ரீதியாக அணுகுவது குறித்தும், சட்டம் குறித்த அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. முப்பதுக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai