Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 193 பேர் மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 193 பேர் மனுக்கள் அளிப்பு

    By  திருவள்ளூர்,  |   Published on : 14th November 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 193 மனுக்களை அளித்தனர்.
     திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது பிரச்னைகளைத் தீர்க்கவும், உதவிகள் வழங்கவும் கோரி மனுக்களை அளித்தனர்.
     இதில் நிலம் தொடர்பாக 49, சமூகப் பாதுகாப்புத் திட்டம்-37, சமூக நலத்துறை 3, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் 3, சுய வேலைவாய்ப்பு 8, சட்டம் மற்றும் ஒழுங்கு 6, குடும்ப அட்டை 3, கடனுதவி கோரி 9, இதர துறை 61, பேரிடர்கள் 7, ஜாதிச் சான்றிதழ் 6, உழவர் பாதுகாப்புத் திட்டம் 1 என மொத்தம் 193 மனுக்கள் அளிக்கப்பட்டன.
     இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
     கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) சீ.ஜானகிராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் வ.சந்தியா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai