சுடச்சுட

  

  திருவள்ளூர் பகுதியில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கடைகளில் விற்றதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   திருவள்ளூர் மாவட்டத்தில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அனைத்துக் காவல் நிலைய ங்களைச் சேர்ந்த போலீஸார் ஆய்வு செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
   இதையடுத்து, மணவாளநகர் பெண் சார்பு ஆய்வாளர் மாலா தலைமையிலான போலீஸார், ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனர். அதில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக தீபக் (30), தட்சிணாமூர்த்தி (45), லட்சுமணன்(43) ஆகியோரை கைது செய்தனர்.
   இதேபோல் செவ்வாப்பேட்டை பகுதியில் வெங்கட்ராமன்(47), பிரகாஷ் (30), விக்கி (23) என மொத்தம் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai