சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தமிழக வேளாண் துறை இணைச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மழை வெள்ள பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமை வகித்தார். 
  வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், மண்டலத் துணை வட்டாட்சியர் தாமோதரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் டில்லிபாபு, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர். கூட்டத்தில், கும்மிடிப்பூண்டியில் வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதற்கான சீரமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
  தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கோட்டக்கரை, தாமரை குளம், மேட்டுத் தெரு சிறு பாலம் மற்றும் கும்மிடிப்பூண்டி மின் வாரிய அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்றவும், எதிர்காலத்தில் மழை வெள்ளம் தேங்காதவாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் ஆலோசனை வழங்கினார். நிகழ்வின் போது, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பா.ஜானகிராமன் உடனிருந்தார்.
  தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் தலையாரிபாளையம் மற்றும் மெதிப்பாளையம் ஆகிய இரு பகுதிகளில் உள்ள பேரிடர் பல்நோக்கு தங்கும் விடுதியைப் பார்வையிட்டனர். மேலும் சுண்ணாம்புக்குளம்
  பெரியகுப்பம் பகுதியில் உள்ள படகு துறை, ஓபசமுத்திரம் பகுதியில் உள்ள படகுதுறை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai