சுடச்சுட

  
  rally

  திருத்தணியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வுப் பேரணியில் நீதிபதி ஜெகதீஸ்வரி, வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர்.

  திருத்தணி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
  திருத்தணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து இப்பேரணியை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகதீஸ்வரி தொடங்கிவைத்தார். இப்பேரணியில், நீதிமன்ற தலைமை எழுத்தர் ராமமூர்த்தி, வழக்குரைஞர்கள்
  லட்சுமணன், அரிதாஸ், கமலக்கண்ணன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர். 
  இவர்கள், அரக்கோணம் சாலை, சன்னதிதெரு மற்றும் முக்கிய தெருக்களில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  அப்போது, சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிக் கடன், குற்றவியல், மோட்டார் வாகன விபத்து, காசோலைகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்
  உள்பட பல்வேறு வழக்குகளுக்கு, சட்டப் பணிகள் குழுவில் மனு கொடுத்து, தீர்த்துக் கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai