சுடச்சுட

  

  திருவள்ளூரில் பகலில் ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
  திருவள்ளூரைஅடுத்த மணவாளநகர் திருத்தொண்டர் தெருவைச் சேர்ந்தவர் பெல்லார்மின்(39). பூந்தமல்லியில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி
  சரளா (35) மணவாளநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், சரளா மதிய
  உணவுக்காக பள்ளிக்கு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது , வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
  இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் சரளா அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai