சுடச்சுட

  

  ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்வதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது

  By DIN  |   Published on : 16th November 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  salaman-rajan

  ஜெருசலேம் நகருக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 15 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
  அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பசும்பொன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ரமணி. இவர் கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேம் நகருக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று வர விரும்பியுள்ளார். இதைத் தனது தோழிகளிடம் அவர் தெரிவித்தார். அவர்கள் 14 பேரும் ஒரு குழுவாக இணைந்து ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்பினர். 
  இதுகுறித்து, குரோம்பேட்டை ராதா நகர், சிந்து கார்டனில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வரும் சாலமன் ராஜனிடம் (46) ஆலோசனை கேட்டனர். 
  அவர், ஜெருசலேம் நகருக்குச் சுற்றுலா சென்று வர நபர் ஒருவருக்கு ரூ. 85ஆயிரம் செலவாகும் என்றும், இத்தொகையை 15 பேரும் ஒரே தவணையில் கொடுத்தால் உடனடியாக ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, ரமணி குழுவினர் சாலமன் ராஜனிடம் தலா ரூ.85 ஆயிரம் வீதம் 15 பேரும் ரூ.12 லட்சம் கொடுத்தனர். ஆனால், சாலமன் ராஜன், அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லையாம்.
  இந்நிலையில், திடீரென சுற்றுலா நிறுவனம் மூடப்பட்டு, சாலமன் ராஜன் தலைமறைவானார். அவரது செல்லிடப்பேசியும் இயங்கவில்லை. 
  இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமணி குழுவினர், அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கந்தகுமாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாலமன் ராஜன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai