Enable Javscript for better performance
கணினி போட்டி: மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    கணினி போட்டி: மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்

    By DIN  |   Published on : 16th November 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    student

    மாவட்ட அளவில் நடைபெற்ற கணினி போட்டியில், திருத்தணி அரசுப் பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார். 
    திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலகத்தில் டெக்னோ கிளப் சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் கணினி போட்டி கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில், 14 ஒன்றியங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    இதில், சூர்ய நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ். சந்தோஷ் குமார், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மாணவரை திருத்தணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன், பள்ளித் தலைமை ஆசிரியை வெண்ணிலா தேவி, வழிகாட்டி ஆசிரியர் நாகேந்திரன் ஆகியோர் பாராட்டி ப் பரிசுகள் வழங்கினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai