சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியில் 18-இல் போட்டித் தேர்வுக்கான கருத்தரங்கம்

  By DIN  |   Published on : 16th November 2017 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வள்ளுவன் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 18) அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
  தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 9,351 இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பணியிடங்களை நிரப்ப 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ளன. 
  இந்நிலையில் கிராமப்புறத்தில் உள்ள பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்திக் கொள்ள, அரசுப் பணியில் சேரும் வகையில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்தும், அதற்கு விண்ணப்பிக்கும் முறை, இந்த தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவது குறித்தும், தேர்வுக்கு தயாராவது குறித்தும் சிறப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை (நவம்பர் 18) காலை 10 மணி முதல் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள வள்ளுவன் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. 
  இதில் துறைசார்ந்த ஆசிரியர்கள் வருகை தந்து, கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இக்கருத்தரங்கில் பங்கேற்கும் ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர் பழங்குடியினருக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. 
  இந்த இலவச கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 9952809908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai