Enable Javscript for better performance
தேசிய கபடி போட்டி: கும்மிடிப்பூண்டி மாணவர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    
    kabadi

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர், தேசிய அளவிலான கபடி போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ச.சரித்திரன். இவர், 14வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய கபடி போட்டியில் தமிழகம் சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
    பல்வேறு கபடி போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் தேர்வாகி, பின் தமிழக அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    தேசிய போட்டிக்குத் தயார் ஆகும் வகையில் சரித்திரன் உள்ளிட்ட தமிழக அணி கபடி வீரர்களுக்கு புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திருப்பூரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்காக மாணவரை வழியனுப்பும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    இவ்விழாவுக்கு, டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் எ.பழனி, முதல்வர் பா.ஞானபிரகாசம், தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். விழாவில், மாணவர் தேசிய அளவில் வெற்றி பெற வாழ்த்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தேசிய கபடி போட்டி வரும் 22 முதல் 24 ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்பூரில் நடைபெற உள்ளது. 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai