சுடச்சுட

  
  collector

  திருவள்ளூர் ரயில்வே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவு நீரை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி. 

  திருவள்ளூர் நகராட்சியில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம் பணிகளை ஆட்சியர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  திருவள்ளூர் நகராட்சியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் நகராட்சியில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் ஆய்வு செய்தார். 
  அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வலியுறுத்தினார். 
  அதையடுத்து, கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேவையில்லாத பொருள்களை போட்டு வைக்கக் கூடாது. அதேபோல் குடிநீர் வைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும் என்றார். பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்து, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விளக்கினார்.
  ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜே.பிரபாகரன், திருவள்ளுர் நகராட்சி ஆணையர் சீ.செந்தில் குமரன், துணை ஆட்சியர் வசந்தி, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், கொசு ஒழிப்புப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai