சுடச்சுட

  

  அம்பத்தூரில் மளிகைப் பொருள் வாங்க கடைக்குச் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்களை போலீஸார் தேடி 
  வருகின்றனர். 
  விஜயலட்சுமிபுரம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், இவரது மனைவி ஜனனி (26). இவர் புதன்கிழமை காலை மளிகைப் பொருள்களை வாங்க, அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 
  அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த இருவர், ஜனனியின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். 
  இதுகுறித்து, ஜனனி அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கந்தகுமாரிடம் புகார் செய்தார். சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  ஆவடியில்...
  ஆவடியில் வீட்டு வாசலில் நின்ற பெண்ணிடம், விற்பனை பிரதிநிதி போல் நடித்து 4 சவரன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 
  ஆவடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் லூர்து மேரி ராஜ் (52). இவர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டு வாசலைப் பெருக்குவதற்காக கேட்டைத் திறந்து வெளியில் வந்தார். 
  அப்போது, விற்பனை பிரதிநிதி போல் உடையணிந்து, பைக்கில் வந்த மர்ம நபர், லூர்து மேரி ராஜின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு, தப்பிச்சென்றான். 
  இதுகுறித்து, ஆவடி காவல் ஆய்வாளர் கர்ணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai