Enable Javscript for better performance
பெரிய புலியூர் ஏரிக் கரையில் உடைப்பு: பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    பெரிய புலியூர் ஏரிக் கரையில் உடைப்பு: பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

    By DIN  |   Published on : 16th November 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    puliyur

    கும்மிடிப்பூண்டியில் ஏரிக் கரைகளை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 
    கும்மிடிப்பூண்டியில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவ மழை செவ்வாய்க்கிழமை ஓய்ந்த நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமையில், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, ஏரிகளைப் பார்வையிட்டு, பலமிழந்து காணப்படும் ஏரிக் கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    எகுமதுரை ஊராட்சியில் ஏரிக்கரையின் மதகு பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து, அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி, மதகுப் பகுதியை சீராக்கினர். தொடர்ந்து, பெரிய ஏரி, சித்தேரி, கரடிப்புத்தூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
    கடந்த வாரம், புதுகும்மிடிப்பூண்டி வண்ணான் ஏரியின் கரை உடைந்து, வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. அந்த ஏரிக்கரை உடைப்பு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் சில மர்ம நபர்கள், ஏரியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தியைப் பரப்பினர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாநிதி, உமாதேவி, ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு உள்ளிட்டோர் ஏரிக்கரையில் உடைப்பு இல்லாததை அறிந்தனர். ஏரிக்கரையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பணிகளை மேற்கொண்டனர். 
    பெரிய புலியூர் ஏரிக்கரையில் உடைப்பு
    இந்நிலையில் பெரியபுலியூர் பகுதியில் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய நீர் அங்குள்ள காப்புக் காடு வழியாக பூவலம்பேடு ஏரியை அடைந்தது. இதனால் அப்பகுதியில் பாதிப்பு இல்லை என்றாலும், ஏரிக்கரை உடைப்பை சரி செய்யும் பணியில் வருவாய் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai