சுடச்சுட

    

    சென்னை கொரட்டூர் பேருந்து நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கொரட்டூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை வழக்கம்போல் பயணிகள் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது, சுமார் 60 வயதுடைய முதியவரின் சடலம் அங்கு கிடந்தது. 
    பயணிகள் அங்குள்ள பேருந்து கண்காணிப்பாளர் மூலம், கொரட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். 
    சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai