சுடச்சுட

  

  தாட்கோ மூலம் விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகள் பயனடையும் வகையில் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயியாக இருத்தல் அவசியம். அத்துடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விளை நிலம் விண்ணப்பதாருக்குச் சொந்தமாக இருப்பதுடன், அவரது பெயரில் நிலப்பட்டாவும், கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு கட்டாயம் அமைத்திருக்க வேண்டும். மேலும், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai