சுடச்சுட

  

  வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

  By DIN  |   Published on : 16th November 2017 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilselvan

  நத்தமேடில் வெள்ள பாதிப்பு பகுதியை பார்வையிட்டவட்டாட்சியர் தமிழ்ச்செல்வன்.

  திருவள்ளூர் அருகே வெள்ள நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் அதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். 
  திருவள்ளூர் அருகே ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நத்தமேடு 
  கிராமத்தைச் சுற்றியுள்ள ராகவேந்திரா நகர், பாலாஜி நகர் 1,2,3 ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அப்பகுதியில் நத்தமேடு ஏரி நிரம்பியது. ஆனால் மதகுகள் திறக்கப்படாததால் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் எங்கும் வெளியில் செல்ல வேண்டியிருந்தால் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டியிருந்தது. 
  அத்துடன், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பாம்புகளும் புகுந்து விடுவதால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி புதன்கிழமை (15.11.2017) தினமணி நாளிதழில் வெளியானது. 
  அதன் அடிப்படையில் வெள்ளம் சூழ்ந்த நத்தமேடு கிராம ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த ராகவேந்திரா நகர், பாலாஜி நகர், 1,2,3 ஆகிய பகுதிகளில் கோட்டாட்சியர் (பொறுப்பு) நாராயணன், வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் எத்தனை குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்பது குறித்து முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். 
  அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொரு மழையின் போதும் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அதனால் ஏரி மதகுகளை திறந்து மழை நீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். 
  இதையடுத்து, உடனே தாங்கல் ஏரி மதகுகளை திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
  அதைத் தொடர்ந்து வெள்ள நீர் வடிந்து சகஜநிலை திரும்பியதும் சாலை வசதி , குடியிருப்புக்குள் நீர் புகாமல் இருக்க ஏரியின் கரைகள் பலப்படுத்துவது குறித்த கோரிக்கைகளை ஆட்சியரிடம் எடுத்துரைப்பதாக வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உறுதி அளித்தார். 
  வருவாய் அலுவலர் முரளி, பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai