சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில் 'அம்மா' திட்ட முகாம் என்கிற வருவாய்த் திட்ட முகாம் இன்று ( வெள்ளிக்கிழமை) 11 இடங்களில் நடைபெற உள்ளது. 
  இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  இந்த மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்களை தேடி வருவாய் திட்டம் என்ற அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட நாளில் இந்த மாவட்டத்தில் 11 இடங்களில் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெற உள்ளது. 
  இதில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்சனைகள், நிலம் சம்மந்தமான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  இந் த மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டந்திலும் குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெற இருக்கிறது. 
  பொன்னேரி -பிரளயம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள காலியிடத்திலும், திருத்தணி-காபுலகண்டிகை கிராமத்தில் மணவூர் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டடம் அருகில் உள்ள காலியிடத்தில், பூந்தமல்லி-அமுதூர்மேடு கிராம சமுதாயக் கூடத்திலும், ஊத்துக்கோட்டை-புதுச்சேரி மதுரா பிரசன்னராமேஸ்வரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அருகில் உள்ள காலியிடத்திலும், கும்மிடிப்பூண்டி-மேல்முதலம்பேடு கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அருகில் உள்ள காலியிடத்திலும், திருவள்ளூர்-தாமரைப்பாக்கம் கிராமம் போளாச்சியம்மன் கோயில் அருகில் உள்ள காலியிடத்திலும், ஆவடி-திருமுல்லைவாயல் - 1 கிராமத்தில் சோலமேடு நடுநிலைப்பள்ளி மைதானத்திலும், பள்ளிப்பட்டு- மைலர்வாடா கிழக்கு கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள காலியிடத்திலும், மதுரவாயல்-வளசரவாக்கம் கிராமம் வார்டு 152 மாநகராட்சி பூங்கா, செளத்திரி நகர் மெயின் ரோடு, வளசரவாக்கம், சென்னை - 87 என்ற முகவரியிலும், திருவொற்றியூர்-திருவொற்றியூர் கிராமம் வார்டு 125 மண்டல அலுவலகம் - 1 எதிரில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் கலை அரங்கத்திலும், மாதவரம்-புத்தகரம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள காலியிடத்திலும் நடைபெற 
  இருக்கிறது. 
  அதனால் அந்தந்த வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்துப் பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai