சுடச்சுட

  

  திருவள்ளூர் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சார்பில் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுத் திறன் சார்ந்த 2 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கி நிறைவுற்றது.
  முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆ.அண்ணாமலை, ரவிந்திரன், ரஹமத்துன்னிசா, லாவண்யா, ஊ.மீனாட்சி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும், ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். 
  அத்துடன், தேர்வு பயத்தை தீர்க்கும் வகையிலும், வகுப்பறையில் சந்தேகத்தை உடனுக்குடன் எவ்வாறு தீர்த்து வைப்பது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. 
  இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் தா.முத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிறைவாக மாவட்டப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பெர்னத் பத்மாவதி மற்றும் ஒன்றியக் கல்வியாளர், தலைமையாசிரியர் ரா.தாஸ் ஆகியோர் நன்றி கூறினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai