Enable Javscript for better performance
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வணிகர் சங்கத்தினர்- Dinamani

சுடச்சுட

    
    vikramaraja

    புழல் காவல் நிலையம் முன்பு விக்கிரம ராஜா தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினர்.

    புழல் அருகே பணம் கேட்டு தர மறுத்த தேநீர் கடை இளைஞர் மீது கொதிக்கும் பாலை ஊற்றி காயப்படுத்திய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, விக்கிரமராஜா தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 
    செங்குன்றம் பாடியநல்லூர் மருது பாண்டி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் புழல் சைக்கிள் கடை அருகே தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு, புழல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், டிப்பு, சங்கர் உள்ளிட்ட 4 பேர் குழு வந்து, அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேநீர் கடை லட்சுமணனின் மகன் விக்னேஷ்(25) கடையில் இருந்தபோது, 4 பேர் குழு அவரிடமும் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. 
    அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த 4 பேரும் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து அவர் மீது ஊற்றினர். 
    இதனால், தீக்காயங்கள் ஏற்பட்ட விக்னேஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
    இக்குற்றத்தில் தொடர்புடைய அரி(20), சங்கர்(26) ஆகிய 2 பேரை புழல் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு கைது செய்தார். இதில் முக்கிய குற்றவாளியான புழல் ரெட்டித்தெருவைச் சேர்ந்த கண்ணனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில இணை செயலாளர் எஸ்.எம்.பி.செல்லதுரை, வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ரவி, கொளத்தூர் பகுதி பொருளாளர் நாகலிங்கம், மற்றும் நிர்வாகிகள் புழல் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai