சுடச்சுட

    

    பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு 25-இல் பயிற்சி

    By DIN  |   Published on : 17th November 2017 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் நோக்கில்பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கம் சார்பில், பொன்னேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 25-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
    முகாமில் பள்ளிகளில் வளர்ச்சிக்கான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும். அதேபோல், பள்ளியின் முன்னேற்றத்துக்கு ம், செயல்பாடுகளுக்கும் மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒத்துழைப்பு வழங்குதல், சமுதாய பங்களிப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியை ஏற்கெனவே அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற தலைமையாசிரியர்களே கருத்தாளர்களாக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். 
    இதில் பொன்னேரி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர், தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai