சுடச்சுட

  

  ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அருகே போதைக்கு அடிமையான இளைஞர் கால்வாயில் விழுந்து இறந்தார். 
  திருமுல்லைவாயல் காவல் எல்லைக்கு உள்பட்ட அயப்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் குபேந்திரன், இவரது மகன் சரண்ராஜ் ( 21). இவர் நண்பர்களுடன் சேர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. 
  இவர் கடந்த 2 நாள்களாக வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், புதன்கிழமை திருவேற்காடு செல்லும் சாலையோரக் கால்வாயில் விழுந்து சடலமாகக் கிடந்தார். 
  இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai