சுடச்சுட

  
  science_show

  திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. 
  பொதட்டூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 8 குறுவட்ட அளவிலான மையங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியரும், குறு வள மைய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.எஸ். இளங்கோவன் வரவேற்றார். திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். 
  இக்கண்காட்சியில் நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கழிவு மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் தொழிநுட்பத் தீர்வுகள் சார்ந்த படைப்புகள் இடம்பெற்றன. இதில், 20 பள்ளிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களின் அறிவியல் படைப்புகள் குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
  இந்நிகழ்ச்சியில், பள்ளிப்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேஷ்வர்லு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இ. எம். எஸ். நடராஜன், பொதட்டூர்பேட்டை ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி, பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உதயசூரியன், ஆசிரியர் பயிற்றுநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai