சுடச்சுட

  

  ஆளுநர் செய்வது மக்களாட்சிக்கு எதிரான செயல்: பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை புகார்

  By DIN  |   Published on : 18th November 2017 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்வது தவறான செயலாகும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை தெரிவித்தார். 
  தமிழகத்தின் அசாதாரண சூழ்நிலையை ஆளுநர் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகிறார். அரசின் பணிகளை அவர் ஆய்வு செய்து வருவது தவறான செயலாகும் என பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை தெரிவித்துள்ளார். 
  சட்டப்பேரவை தொகுதிக்கான நிதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எம்எல்ஏ ஏழுமலை வந்திருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை பெய்து குடியிருப்புகளை வெள்ளம் 
  சூழந்துள்ளது. 
  ஆனால், பணிகள் செய்வதற்கு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. அதற்குக் காரணம் தற்போதைய முதல்வர் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தி வேலை வாங்க முடியாத நிலையில் இருக்கிறார். 
  இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆளுநர் தமிழக அரசுப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இது மக்களாட்சிக்கு எதிரான செயலாகும். இதற்கு முன்பு, புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையின் போது 36 ஆயிரம் அரசு அதிகாரிகளை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஈடுபடுத்தினார். 
  ஆனால், தற்போதைய நிலையில் முதல்வர் அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலையில் இருக்கிறார். 
  ஆனால், டி.டி.வி.தினகரன் அரசு பதவியில் இல்லை. எனவே அவரை அச்சுறுத்தும் நோக்கத்திலேயே 187 இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai