Enable Javscript for better performance
கும்மிடிப்பூண்டி அருகே ஏரிக்கரை உடைந்தது- Dinamani

சுடச்சுட

    
    sundaravali

    திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் வண்ணான் குப்பம் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
    வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் தொடர்ச்சியாக கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உள்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள வண்ணான் குப்பம் ஏரியில் கடந்த 6ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் புதுகும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது.
    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு மற்றும் பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு அங்கு ஏரி உடைப்பை அடைத்து மழை வெள்ள நீர் வெளியேறுவதை தடுத்தனர்.
    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பெய்த மழையில் ஏரிக்கரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி புதுகும்மிடிப்பூண்டி விரைந்து வண்ணான் ஏரியை ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு ஏரி உடைப்பை 2000 மணல் மூட்டைகள் வைத்து சரிசெய்தும், ஏரிக்கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டதோடு, ஏரியை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஏரியை ஒட்டி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய் துறையினரிடம் கேட்டு, அவற்றை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.
    தொடர்ந்து அதிகாரிகளிடம் தொடர் மழை காரணமாக சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு சுகாதார துறையினர் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தினார். 
    நிகழ்வின் போது பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, கிராம நிர்வாக அலுவலர் ஜோதிபிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai