Enable Javscript for better performance
திருத்தணி அருகே ஏரி மண் கடத்திய வாகனம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி அருகே ஏரியிலிருந்து மண் கடத்திய வாகனத்தை திருத்தணி போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
    திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டிபள்ளியில் உள்ள ஏரியில் இருந்து டிராக்டர் மூலம் மண் கடத்துவதாக திருத்தணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் 
    கிடைத்தது. 
    இதையடுத்து, திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் சுரேந்தர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஏரியில் இருந்து மண் அள்ளி ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் அவர்கள் அனைவரும் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
    டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai