சுடச்சுட

  

  திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த வழக்குரைஞரின் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
  திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருபவர் சசிகுமார். இவரது காரை மணி வெள்ளிக்கிழமை ஓட்டிவந்தார். அதில், சசிகுமார் மற்றும் அவரின் உறவினர்கள் திருமலை, அவரது மனைவி நவநீதம் உள்ளிட்டோர் அமர்ந்து வந்தனர். 
  நீதிமன்ற வளாகத்தில் காரை நிறுத்தியதும், உறவினர்களை காரிலேயே அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு சசிகுமார் நீதிமன்றத்துக்குள் சென்றார். 
  அப்போது, வாகனத்தின் முன்புறம் உள்ள இயந்திர பாகத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சசிகுமாரின் உறவினர்கள் பதற்றம் அடைந்து காரை விட்டு கீழே இறங்கி ஓடினர். 
  அதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த தீயணைப்பான் கருவியைக் கொண்டு, காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வாகனத்தின் மின்கலம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. 
  இதனால், அருகில் உள்ள வாகனங்களுக்கும் தீ பரவாமல் தடுப்பதற்காக மற்ற வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai