Enable Javscript for better performance
பயிர் காப்பீட்டு திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான சிறப்புப் பதிவு முகாம் புதன் கிழமை நடைபெற்றது.
    ஓபசமுத்திரம் பொது சேவை மையத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வேளாண் உதவி அலுவலர்கள் அருள்முருகன், இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இந்த முகாமில் ஓபசமுத்திரம், மேலக் கழனி, சுண்ணாம்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இதில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டப்படி, ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.377 காப்பீடாக செலுத்திப் பதிவு செய்தனர். இதன்மூலம், வெள்ளம், வறட்சி மற்றும் பேரிடர் காலத்தில் பயிர் பாதிப்பு இழப்பீடாக, ஒரு ஏக்கருக்கு ரூ. 25ஆயிரத்து 150 வரை விவசாயிகள் பெற முடியும். முகாமில், முதல் நாளில் 150 விவசாயிகள் பயிர் காப்பீட்டை பதிவு செய்தனர். இந்த முகாம் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற 
    உள்ளது. 
    கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை மற்றும் மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் வரும் 30 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் விவசாயிகள் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai