சுடச்சுட

  
  susaid

  கோவிந்தம்மாள், கிருஷ்ணப்ப ரெட்டியார்

  பெரியபாளையம் அருகே மகனுக்கு உதவ முடியாத விரக்தியால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர்.
  கிருஷ்ணாபுரம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த தம்பதியர் கிருஷ்ணப்ப ரெட்டியார்(85), கோவிந்தம்மாள்(80). இவர்களின் மகன் செல்வராஜுக்கு (55) சர்க்கரை நோயின் காரணமாக கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. 
  செல்வராஜுக்கு சாந்தி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பினால், படுக்கையில் கிடந்த கணவரை சாந்தியால் கவனிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயதான தந்தையும் தாயும் மகனை பராமரித்து வந்தனர். 
  இந்நிலையில், வயோதிகம் காரணமாக பெற்றோரும் படுக்கையில் விழ நேர்ந்தது. மகனுக்கு உதவ முடியாமல் அதேசமயம் மருமகளுக்கும், பேரன்களுக்கும் பாரமாக இருக்க விரும்பாத பெற்றோர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai