சுடச்சுட

  

  மழை பெய்தும் நிரம்பாததால் மேய்ச்சல் நிலமாகிய பூண்டி ஏரி

  By DIN  |   Published on : 18th November 2017 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  poondi

  மேய்ச்சல் நிலமாகிய பூண்டி ஏரியின் பின் பகுதி. (உள்படம்) பூண்டி ஏரியின் நீர் மட்டத்தை காட்டும் அளவுகோல்.

  வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்த நிலையிலும், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் பூண்டி ஏரி நிரம்பாததால் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  தமிழகத்தில், சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 29-ஆம் தேதியிலிருந்து பெய்த தொடர் மழையால் சிறிதும், பெரிதுமான நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகின்றன. 
  இதில் பெரும்பாலான பகுதிகளில் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் அனைத்தும் வெளியேறி நிலங்களிலும், குடியிருப்புப் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்தன. அதேபோல், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அதிக நீர் வரத்தும், பூண்டி ஏரி மட்டும் குறைந்த அளவில் நீர் வரத்தும் உள்ளன. 
  பூண்டி ஏரி நிரம்பினால் கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரபாக்கத்துக்கும், உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக எண்ணூர் கடலுக்கும் சென்றடையும். தற்போதைய நிலையில் ஏரியில் பாதியளவு நீர் மட்டுமே உள்ளது. அதனால் தண்ணீர் இல்லாததால் புல்வெளிகளில் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. 
  பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 கன அடியாகும். தற்போதைய நிலையில் 924 கன அடியாக நீர் இருப்பு உள்ளது. இதில் நீர்வரத்து 194 கன அடி யாகவும், நீர் வெளியேற்றம் 16 கனஅடி யாகவும் உள்ளது. இதற்குக் காரணம் வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பு போன்றவற்றால் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இப்போது, இப்பகுதியில் பெய்த மழைநீரால் தான் ஏரிக்கு நீர் வரத்து உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
  இதுகுறித்து, பூண்டி ஏரிக்கரை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கருணாநிதி கூறியதாவது: சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. தற்போதைய நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தும், 35 அடி கொள்ளளவு கொண்ட, ஏரியில் 25 அடிதான் நீர் மட்டம் உள்ளது. இதற்குக் காரணம் வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளன. இதுபோன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai