சுடச்சுட

    

    பள்ளிக்குச் சென்ற மாணவியை பின்தொடர்ந்து கேலி செய்ததாக இளைஞர் ஒருவரை வெள்ளவேடு போலீஸார் கைது செய்தனர். 
    திருவள்ளூர் அருகே திருமணம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற பிரீத் (23) பின் தொடர்ந்து சென்று கேலி செய்து வந்தாராம். 
    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் தாயார் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், மாணவியை கேலி செய்ததாக தினேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai