சுடச்சுட

  

  அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், மாணவ, மாணவிகளின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட அளவில் வரும் 23-ஆம் தேதி அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் அறிவியல் ரிதீயாக ஆய்வு செய்ய வைக்கும் நோக்கத்தில் அறிவியல் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இயற்கைப் பேரிடர், சூரிய ஒளி மின்சாரம் , சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட 8 தலைப்புகளில் மாநில அளவில் மாவட்டந்தோறும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 
  திருவள்ளூர் மாவட்ட அளவிலான இந்தக் கண்காட்சி வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில், ஒவ்வொரு தலைப்பு வாரியாக சிறப்பிடம் பெறும் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபோன்று தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ. 1,500, 2-ஆவது பரிசாக ரூ. 1,000 மற்றும் 3-ஆவது பரிசாக ரூ. 500 பரிசுத் தொகை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும். இதில் சிறப்பிடம் பெறுவோர் அடுத்து மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 
  இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்டந்தோறும் தலா ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அறிவியல் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடு, மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு , நடுவர்கள் ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றுக்கு செலவு செய்யும் வகையில் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai