Enable Javscript for better performance
வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மக்களவை உறுப்பினர் வேணுகோபால் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது, மழைக்காலத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல், பொதுமக்கள் அடிப்படை வசதி குறித்த கோரிக்கையை உடனே நிறைவேற்றவும் வலியுறுத்தினார். மேலும், கிராமங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி நிர்வாகிகள் ஆகியோரிடையே ஆலோசனை செய்த பின்னரே பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். 
    பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மணிமாறன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சந்திரசேகர், எம்.ஜி.ஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் செவ்வை சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சக்தி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai