சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். 
    சுங்குவார்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (35) . இவர் தனது இருசக்கர வாகனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான நாகராஜ் என்ற சேட்டு (34), நவீன்குமார்(22) ஆகியோரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வியாழக்கிழமை இரவு மப்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 
    அப்போது நந்திமேடு அருகே வரும்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நவீன்குமார் உயிரிழந்தார். மேலும் விநாயகமூர்த்தி, நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
    இவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து நவீன்குமாரின் தந்தை மோகன்ராம் மப்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai