சுடச்சுட

  

  எம்.பி. தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

  By  திருவள்ளுர்,  |   Published on : 19th November 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திருவள்ளுர் எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.
   திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, திருவள்ளுர் எம்.பி. டாக்டர். பி.வேணுகோபால் தலைமை வகித்தார். ஆட்சியர் எ. சுந்தரவல்லி முன்னிலை வகித்தார்.
   கூட்டத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய கிராம நகரத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமம்), தூய்மை பாரத இயக்கம் (கிராமம்), தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்தியாயா கிராமின் கெüசல்யா யோஜனா, சத்துணவு திட்டம், தேசிய சமூக நலத் திட்டம், தேசிய நிலப் பதிவேடுகள் நவீன மயமாக்கும் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (நகரம்), தூய்மை பாரத இயக்கம் (நகரம்), அம்ரத் திட்டம், தேசிய ஊரக குடிநீர்த் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம், பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம், தேசிய சுகாதாரத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தேசிய தகவல் மையம், தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
   அப்போது, சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அலுவலர்கள் விவரம் அளித்தனர். இக்கூட்டத்தின் போது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மூலம் கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, தையல் பயிற்சி பெற்றுள்ள 5 பெண்களுக்கு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விலையில்லா தையல் இயந்திரங்களும், வேளாண்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருள்களும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு சோலார் சார்ஜர்களுடன் கூடிய காதொலி கருவி என மொத்தம் 26 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
   இக்கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என். ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் பி.பலராமன் (பொன்னேரி), வி.அலெக்ஸாண்டர் (அம்பத்தூர்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ச.சா.குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai