சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
   அகமதாபாதில் தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து மீஞ்சூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு இரும்புக் குழாய்களை ஏற்றிக் கொண்டு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இரு கனரக லாரிகள் சென்னை நோக்கி வந்தன. அந்த லாரிகள் வெள்ளிக்கிழமை கும்மிடிப்பூண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தன.
   அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது.
   இந்த விபத்தில் முன்னால் சென்ற லாரியில் இருந்த இரும்புக் குழாய்களில் மோதியதில், பின்னால் வந்த லாரியின் முன்பகுதி முழுவதும் சிக்கிக் கொண்டது. இதில், லாரி ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவ் சிங் (35) உயிரிழந்தார்.
   தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் 2 மணி நேரம் போராடி இரு லாரிகளையும் பிரித்து லாரி ஓட்டுநர் கிருஷ்ண தேவ் சிங்கின் உடலை மீட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai