Enable Javscript for better performance
சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10நாள்களாக பெய்த கனமழையால் பொன்னேரி-மீஞ்சூர் சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
     தூசியால் அவதிப்படும் மக்கள்: அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கப்பல் கட்டும் தளம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், இடையஞ்சாவடி, கொண்டக்கரை, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள தனியார் கண்டெய்னர் கிடங்குகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் இச்சாலை வழியேதான் சென்று வரவேண்டும். இதனால் பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் எப்பொழுதும் அதிக அளவு கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறைந்திருக்கும்.
     குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலை வழியே கனரக வாகனங்கள் செல்லும் போது, கூடவே தூசியும் பறக்கின்றது.
     இதனால் பொன்னேரி தாயுமான் செட்டி தெரு, அம்பேத்கர் சாலை சந்திப்பு, மீஞ்சூர் சாலை ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
     பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அம்பேத்கர் சிலை அருகே சனிக்கிழமை முகத்தில் துணியை மூடிக்கொண்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
     இதுகுறித்து அறிந்த, நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் தூசு பறக்காமல் இருக்க மினி லாரியில் தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதியில் தெளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai