சுடச்சுட

    

    சென்னை பாடியில் மும்பையைச் சேர்ந்தவர் நடத்திவந்த சரக்குக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, பொருள்கள் சாம்பலாயின.
     பாடி பாலாஜி நகரில் மும்பையைச் சேர்ந்த மகேஷ்லால் சரக்குக் கிடங்கு வைத்துள்ளார். இங்கு, லாரிகள் மூலம் வெள்ளிக்கிழமை வந்த சரக்கு பண்டல்களை ஊழியர்கள் இறக்கிவைத்தனர்.
     வழக்கம்போல் இரவில், கிடங்கைப் பூட்டி விட்டு சென்றபின், நள்ளிரவில் திடீரென கிடங்குக்குள் இருந்து புகை மண்டலம் வெளிவந்தது. அருகில் இருந்தவர்கள் இதைப் பார்த்ததும், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
     அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து, ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
     கிடங்கின் உரிமையாளர் மும்பை சென்றுவிட்டதால், தீ விபத்தில் எரிந்துபோன பொருள்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai