சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணியில், மனைவியை போலீஸார் கைது செய்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
   ஆரணி தெலுங்கு காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45)(படம்). லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகிலா(38).
   தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் ரமேஷின் தங்கை அனுராதா(35) குடும்பத்துடன் வசித்து
   வருகிறார்.
   இந்நிலையில் ரமேஷின் மனைவி மகிலாவிற்கும், அனுராதாவிற்கும் இடையே இரு வீட்டு சாக்கடை நீர் செல்லும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
   தொடர்ந்து மகிலாவிற்கு ஆதரவாக, ஏரிக்குப்பம் பகுதியை சேர்ந்த மகிலாவின் சகோதரர் தனஞ்செழியன்(26), சகோதரிகள் செஞ்சியம்மா(48), கலா(28) ஆகியோர் வந்து அனுராதாவிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினராம். இதனால் காயமுற்ற அனுராதா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
   இது தொடர்பாக அனுராதா அளித்த புகாரின் பேரில், ஆரணி போலீஸார் மகிலா, அவரது உறவினர்கள் செஞ்சியம்மா, கலா, தனஞ்செழியன் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
   இதனால் மனமுடைந்த ரமேஷ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai