Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த பெயிண்டர் கால் தவறி, மின்கம்பியில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
     திருமுல்லைவாயல் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் துரைவேல் (31) பெயிண்டர். இவர் பாடி குமரன் நகர், திருவள்ளுவர் தெருவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தார். 2 ஆவது மாடியில் கயிற்றில் தொங்கியபடி பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்தார். அப்போது, மின்சார கம்பியில் உடல் பட்டதில், தூக்கி வீசப்பட்டார்.
     அவரைஅருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.
     அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே துரைவேல் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai