சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியலில் திருத்தம்: புதிய செயலி அறிமுகம்

  By  அம்பத்தூர்,  |   Published on : 19th November 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தாலுக்காவில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழைகள் திருத்துதல் போன்றவற்றை செல்லிடப்பேசியில் உள்ள செயலியின் மூலம் நிறைவேற்றும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
   ஆவடியில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழைகள் திருத்துதல் போன்றவற்றை செல்லிடப்பேசி மூலம் நிறைவேற்றும் செயலியை அறிமுகப்படுத்தி வட்டாட்சியர் மதன்குப்புராஜ் கூறியதாவது: ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 2,05,825 பேர். பெண் வாக்காளர்கள் 2,05,430 பேர். இதர பிரிவினர் 89 பேர். மொத்தம் 4,11,344 வாக்காளர்கள்
   உள்ளனர்.
   முன்னர், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், தவறுகள் களைதல் ஆகியவற்றை ஆங்காங்கே முகாம்கள் நடத்தி நிறைவேற்றப்பட்டுவந்தது. அதில் ஏராளமான தவறுகள் நிகழ்ந்தன.
   தற்போது, தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தும் வசதி, செல்லிடப்பேசியில் உள்ள புதிய செயலியில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்காளர் பெயர் நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை திருத்தல் ஆகிய பணிகளை, அரசு ஊழியர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று திருத்தம் செய்வார்கள். திருத்தப்பட்ட பட்டியல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். இதனை பரிசீலனைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடும்.
   இந்த எளிய நடைமுறையை அறிமுகப்படுத்தி, ஆசிரியைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் 383 ஆசிரியைகள் ஈடுபட்டுள்ளனர். புதிய செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் நாள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai