சுடச்சுட

  

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கையேடு வழங்கல்

  By  கும்மிடிப்பூண்டி,  |   Published on : 20th November 2017 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கே.டி.வி. ஆரோக்கிய உணவுகள் என்ற தொழிற்சாலை சார்பில் புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை தேர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.
   நிகழ்ச்சிக்கு, கே.டி.வி. நிறுவனப் பொது மேலாளர்கள் நாராயணன், கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலாளர் சீனிவாசலு, துணைப் பொது மேலாளர் தியாகராஜலு, மனித வள மேலாளர் யுவராஜ், தலைமை பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   சிறப்பு அழைப்பாளர்களாக புதுகும்மிடிப்பூண்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான கையேடுகளை வழங்கினர்.
   விழாவில் நிர்வாகிகள் மகேந்திரன், தினேஷ், சண்முகம், பரத்குமார், மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai