சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 15 அரசுப் பள்ளிகளுக்கு இடையே நடந்த அறிவியல் கண்காட்சியில், சூர்யநகரம் அரசுப் பள்ளி முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது.
   அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், சூர்யநகரம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடந்தது. இதில், ஒன்றியத்தில் உள்ள சூர்யநகரம், தெக்களூர் காலனி, புச்சிரெட்டிப் பள்ளி, இஸ்லாம் நகர், கஜலட்சுமிபுரம், பொம்மராஜபுரம் உள்ளிட்ட 15 அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி வைத்திருந்தனர்.
   கண்காட்சியை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாபு, மோகன், அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுநர் கவிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், தொடக்கப் பள்ளி அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சூர்யநகரம் அரசு தொடக்கப் பள்ளி முதலிடத்தையும், நடுநிலைப் பள்ளி அளவில், சூர்யநகரம் அரசு நடுநிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
   பள்ளி தலைமை ஆசிரியர் வெண்ணிலாதேவி, ஆசிரியர்கள் நாகேந்திரன், லதா, ஜோசினா ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai