சுடச்சுட

  

  தொண்டு நிறுவனத்தை திறந்து வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

  By  மாதவரம்,  |   Published on : 20th November 2017 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்குன்றம் அருகே நோயாளிகளுக்கு இலவச சேவை அளிக்கும் தொண்டு நிறுவனத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
   திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த சிறுணியம் அருகே "அபயம்' என்ற தொண்டு நிறுவனம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டு நிறுவனத்தைத் திறந்து வைத்து பேசியதாவது:
   வறுமையில் வாடும் நோயாளிகள் தங்களை கவனித்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களை இலவசமாக கவனித்துக் கொள்ளும் பணியை அபயம் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.
   பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், எம்எல்ஏ அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் வி.மூர்த்தி, நிர்வாகிகள் கார்மேகம், செல்வம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிர்வாகிகள் செய்திருந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai