சுடச்சுட

  

  தொல்பொருள்கள் சிறப்புக் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

  By  திருவள்ளூர்,  |   Published on : 20th November 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலக மரபு வார விழாவையொட்டி, தொல்பொருள்களின் சிறப்புக் கண்காட்சியினை ஆட்சியர் எ. சுந்தரவல்லி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
   திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, ஐ.எச்.எச். வளாகத்தில் உள்ள தொல் பழங்கால அகழ்வைப்பகத்தில் இக்கண்காட்சி நடைபெற்றது.
   கண்காட்யை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது: உலக மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19 முதல் 25 வரையிலான நாள்களை உலக மரபு வாரமாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றது. உலக மரபு வாரம் 1988-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மத்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் உலக மரபு வார விழாவினை தொடர்ந்து கொண்டாடி வருகின்றன. இந்தியாவிலேயே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகையில் தான் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பயன்படுத்திய பளபளப்பான கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தி அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பட்டரைபெரும்புதூரில் அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூண்டி அகழ்வைப்பகம் மற்றும் குடியம் குகைப்பகுதியினை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
   மேலும், இக்கண்காட்சியினை திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு பயன்பெறும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இக்கண்காட்சியில் பூண்டி தொல்பழங்கால அகழ்வைப்பக காப்பாட்சியர் (பொ) பொ.கோ.லோகநாதன், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், காப்பக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai