சுடச்சுட

  

  முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட 20 பேர் மீட்பு

  By  திருத்தணி,  |   Published on : 20th November 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்தணி நகராட்சிப் பகுதியில் ஆதரவற்ற, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட 20 பேரை "நம்ம இளைஞர்கள்' அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீட்டு, அதில் 4 பேரை மன நல காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
   திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், ஆதரவற்றோர் என பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில் வளாகம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றித் திரிந்து வந்தனர். இந்நிலையில், "நம்ம இளைஞர்கள்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட இடங்களுக்கு நேரில் சென்று 20-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்து, உணவு வழங்கினர்.
   மேலும், மீட்கப்பட்டவர்களில் மன நலம் பாதித்த 4 பேரை அரசு மனநலக் காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர். இவ்வாறு சமூகப் பணியில் ஈடுபட்ட இளைஞர்களை நகர மக்கள் பாராட்டினர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai