சுடச்சுட

  

  சென்னை மாதவரம் ரெட்டேரி மேம்பாலப் பணியை விரைந்து முடிக்கக் கோரி, பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு, மண்டலத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் சசிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ கோ.ரவிராஜ், ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், இந்த மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என கோஷம் எழுப்பினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai