Enable Javscript for better performance
723 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: எம்.பி., எம்எல்ஏ வழங்கினர்- Dinamani

சுடச்சுட

    

    723 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: எம்.பி., எம்எல்ஏ வழங்கினர்

    By  திருத்தணி  |   Published on : 20th November 2017 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிவழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
     அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள்.எம்.சுரேஷ் வரவேற்றார்.
     இந்நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன் ஆகியோர் பங்கேற்று, 406 மாணவிகளுக்கும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 317 மாணவர்களுக்கும் என மொத்தம், 723 மடிக்கணினிகளை வழங்கினார்கள்.
     நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி ஆய்வாளர் ராமமூர்த்தி, திருத்தணி நகர் மன்ற முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் டி.டி. சீனிவாசன், ஆண்கள் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி, சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai